Thursday, March 29, 2012

முஸ்தபா அக்காத் - ஹாலிவூட்டை அசத்திய முஸ்லிம்.


மாஷா அல்லாஹ் இந்த தளத்தின் 200 ஆவது பதிவு.


முஸ்தபா அக்காத்



"இன்றைய காலகட்டத்தில் தீவிரவாதம் என்றால் பயங்கரவாதம் என்றால் இஸ்லாம்,முஸ்லிம்கள் என்று ஒரு மாயை உலகெங்கும் திரைப்படங்கள் மூலமும் செய்தி ஊடகங்கள் மூலமும் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் மதத்தீவிரவாதிகள் மதத்தீவிரவாதம் என்று ஒன்றை நாம் கருத வேண்டும் என்றால் அது இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் மீது மேட்கோள்ளப்பட்ட சிலுவைப் போரைத்தான் குறிப்பிடவேண்டும்.நான் கிறிஸ்தவத்தை குறை கூறவில்லை ஏனெனில் அந்தப் போர் சில சுயநலவாதிகளால் கிறிஸ்தவத்தின் பெயரால் மேட்கொள்ளப்பட்டதொன்றாகும்."இவ்வாறு சொன்னவர்தான் முஸ்தபா அக்காத்.

யார் இந்த முஸ்தபா அக்காத் ?



     1930 இல் சிரியாவில் அலெப்பு என்ற நகரில் பிறந்த முஸ்தபா அக்காத் சிறு வயது முதலே சினிமாத்துறையில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்பட்டார்.எனவே தனது கல்லூரிப் படிப்பில் சினிமா இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றை பாடமாக எடுத்து அமெரிக்காவில் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார்.பின்னர் புகழ் பெற்ற ஹாலிவூட் இயக்குனர் சாம் பெக்கின்பாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றினார்.அந்த காலகட்டத்தில் தான் மேலை நாட்டு ஹாலிவூட் இயக்குனர்கள் இஸ்லாத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தம் திரைப்படங்களில் சில விசமக் கருத்துக்களை புகுத்தி வந்தனர்.இந்த நிலைமை உணர்ந்த முஸ்தபா அக்காத் ஒரு முடிவுக்கு வந்தார்.இஸ்லாத்தின் உண்மையான கருத்துக்களை மேலை நாட்டவர்களுக்கு அவர்களின் பாணியில் அவர்களுக்குப் புரியும் மொழியான ஹாலிவுட்டின் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்று சபதம் எடுத்தார்.அதன் விளைவு தான் உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய "தி மெஸேஜ்" திரைப்படம்.1978 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் உலகெங்கும் திரையிடப்பட்டது."தி மெஸேஜ்" திரைப்படம் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பற்றியும் ஒரு அறிமுகத்தை மேற்குலகில் வைத்தது.இந்த திரைப்படம் பற்றி முஸ்லிம் உலகில் சாதகமாகவும் பாதகமாகவும் பல விமர்சனங்கள் எழுந்தன.

இஸ்லாத்தின் வரலாற்றோடு நின்று விடாமல் இஸ்லாமிய வரலாற்று நாயகர்கள் வரலாறும் வெகுஜன ஊடகங்களில் வரவேண்டும் என ஆசைப்பட்டார்.அவரின் அந்த உயரிய எண்ணத்தின் விளைவே 1980 இல் வெளியான " The Lion Of The Desert "  திரைப்படம்.லிபியாவில் ஆதிக்கம் கொண்டிருந்த முசோலினியின் இத்தாலியப் படைகளுக்கு எதிராக போராடிய உமர் முக்தாரின் வாழ்க்கை பற்றிய படமே அது.முஸ்தபா அக்காத் தனது "தி மெசேஜ்" திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்த போது அதை நிறுத்துமாறு சவுதி அரசு கேட்டுக் கொண்டது.இதன் போது அவருக்கு நிதியியல்ரீதியாக உதவியவர் மறைந்த லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி என்பது குறிப்பிடத்தக்கது.

 உமர் முக்தார்


இப்படி தொடர்ந்த இவரின் இந்த பயணத்தின் அடுத்த தயாரிப்பாக இருந்தது இஸ்லாமிய உலகம் கண்ட ஒரு மாபெரும் தளபதி சலாஹுத்தீன் அய்யூபி பற்றிய வரலாற்றுத் திரைப்படமாகும்.கதை திரைக்கதை மற்றும் ஷூட்டிங்க்கு முன்பாக செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்து விட்டு திரைப்படத்தை எடுப்பதற்கான இடங்களை தெரிவு செய்ய ஜோர்டான் வந்திருந்த போது 2005 11 09 ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தையும் சிலுவைப் போரின் போது கிருஸ்தவ பெயர்தாங்கிகள் செய்த அட்டூழியங்களையும் இவர் வெளிக்காட்டி விடுவார்களோ என்று பயந்து அல் கைதா என்ற முகமூடியில் அவரைக் கொன்றது உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் மொஸாட்.


உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ்.அல்லாஹ் அவரின் நல்ல காரியங்களை ஏற்றுக்கொள்ளட்டும்.



ஒரு மேலதிக செய்தி...


ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற அந்த தொடர் குண்டுத்தாக்குதலில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.வழக்கம் போல இதன் பலி அல் கைதாவின் மீது போடப்பட்டது.இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் பின்னணியை அலசி ஆராயும் போது இதை யார் செய்திரிப்பார்கள் என்பது தெளிவாகிவிடும்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள்.
  1. முஸ்தபா அக்காத் 
  2. மேஜர் ஜெனரல் பஷீர் - பாலஸ்தீன உளவுத்துறை தலைவர்.
  3. கலோனல் ஆபித் அலூன் - பாலஸ்தீன முன்னெச்சரிக்கை படை உயரதிகாரி.
  4. ஜிஹாத் பதவ் மற்றும் மூஸா கோர்மா - பாலஸ்தீன பொருளாதார வல்லுனர்கள்.
  5. சீன இராணுவ அதிகாரிகள் 
  6. காலிப் அப்துல் மஹ்தி - ஈராக் துணை அதிபரின் சகோதரர். 
  7. அப்பாவி பாலஸ்தீனியர்கள் 
  8. அப்பாவி ஜோர்டானியர்கள் 
 
இப்போது புரிந்திருக்கும் இந்த செயலை யார்செய்திருப்பார்கள் என்று.




நன்றி 

விடியல் வெள்ளி மாத இதழ் 
விக்கிபீடியா  









Friday, March 16, 2012

THE KABBALAH - பண்டைய யூத சூனியக் கலை.




பயங்கர இரகசிய சமுதாயம் பாகம் 2


The Hiram Key: Pharaohs, Freemasons, and the Discovery of the Secret Scrolls of Jesus

கிறிஸ்தோபர் நைட் மற்றும் ரோபர்ட் லோமஸ் என்ற இரு பிரீமேசன்களால் எழுதப்பட்ட The Hiram Key என்ற நூல் பிரீமேசன் பற்றியும் அதன் ஆரம்ப கால வரலாறு பற்றியும் பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றது.இந்த இரு ஆசிரியர்களினதும் கூற்றுப்படி FREEMASONARY என்பது KNIGHT TEMPLARS இன்
அடிச்சுவடுகளை பின்பற்றி தொடர்ந்து வரும் ஒரு அமைப்பாகும்.மேலும் இவர்கள் இந்த நூல் மூலம் KNIGHT TEMPLARS இன் ஆரம்ப வரலாற்றையும் அதன் கொள்கைகளில் தாக்கம் செலுத்திய ஏனைய நம்பிக்கைகளையும் விலாவாரியாக ஆராய்ந்து எழுதியுள்ளனர்.

இவ்விருவரின் ஆய்வுப்படி கிருஸ்தவ மதத்தை அடிப்படையாகக் கொண்டு அம்மதத்தைக் காக்க என உருவான இயக்கம் அது ஜெருசலத்தில் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டிய போது  அது அதன் அடிப்படை கொள்கைகளிலிருந்து தடம்புறலத் துவங்கியது.ஜெருசல நகரில் இருந்த TEMPLE OF SOLOMAN என்ற ஆலயத்தை  இவர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படும் விடயமே இந்த மாற்றத்துக்கு காரணமாக இருந்தது.மேல் கூறப்பட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கு அமைய புனித ஜெருசல நகருக்கு வரும் கிருஸ்தவ யாத்ரீகர்களின் பாதுகாப்பாளர்கள் என்ற போர்வையில்  அவர்கள் ஈடுபட்ட விடயங்கள் கிருஸ்தவ மதத்துக்கு முற்றிலும் மாற்றமான விடயங்களாகும்.

".......அவர்கள் ஜெருசலம் வரும் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு அளித்தார்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.ஆனால் அவர்கள் இரண்டாம் ஆலயத்தில் அதாவது Herods Temple இன் இடிபாடுகளுக்கு கீழே பரவலான முறையில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன."
(REF : Hiram Key Page 37)
இரண்டாம் ஆலயத்தின் மாதிரி படம்.
Hiram Key நூலின் எழுத்தாளர்கள் மட்டுமல்ல Gaetan Delaforge என்ற புகழ்பெற்ற பிரஞ்சு வரலாற்றாசியரும் இது பற்றி பல ஆதாரங்களை முன்வைக்கிறார்.

Knight Templar இயக்க உறுப்பினர்கள் இரண்டாம் ஆலயத்தின் இடிபாடுகளுக்கிடையில் சில நினைவுச் சின்னங்களையும் கையெழுத்துச் சுவடிகளையும் தேடி பாரிய அளவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.அவர்கள் அவற்றை தேட ஒரு காரணமும் இருந்தது.அவற்றில் பண்டைய யூத மற்றும் எகிப்திய கலாச்சாரங்களின் இரகசியமான மிகவும் சக்திவாய்ந்த வழிபாட்டு முறைகள் அடங்கி இருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.
(REF : Templar Tradition In The Age Of Aquarius - Gaetan Delaforge)


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் Royal Engineers சார்பாக Charles Wilson என்பவர் ஜெருசல நகரில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்.அவரின் கருத்துப்படி ரோம ஆக்கிரமிப்பின் போது அழிந்து போன Soloman Temple பற்றி ஆராய்ச்சி செய்யவே Knight Templar குழுவினர் ஜெருசலத்துக்கு வந்தார்கள் எனவும்,தான்  அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் போது Knight Templar களால் பயன்படுத்திய கருவிகளையும் அவர்கள் அந்த இடத்தில் ஆராய்ச்சி செய்ததற்கான தடயங்களையும் கண்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

Knight Templar இயக்கத்தினர் ஜெருசல நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள் அவர்களுக்கு பயனளித்ததாகவும் அதன் மூலம் அவர்கள் உலகை பார்க்கும் போக்கை மாற்றிக் கொண்டார்கள் என Hiram Key இன் ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள்.மேலும் பல ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்துக்கு அமைய கிருஸ்தவ உலகத்திலிருந்து கிறிஸ்தவத்தை தாங்கி ஜெருசல நகருக்கு வந்தவர்கள் கிறிஸ்தவத்துக்கு முற்றிலும் மாற்றமான சடங்குகளில் இடுபட ஒரு பலமான காரணம் இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

பல ஆராய்ச்சியாளர்களின் பொதுவான கருத்துக்கு அமைய "அந்த பலமான காரணம்" தான்  "THE KABBALAH "  என்ற பண்டைய யூத சூனியக் கலை.

KABBALAH என்பது யூத மதத்தின் ஒரு விசித்திரமான ஒரு கிளை என்கிறது அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள்.ஆனால் நாம் இந்த விடயத்தைப் பற்றி இன்னும் ஆழமாக ஆய்வு செய்யும் போது இந்த விசித்திரமான சடங்கு முறைகளில் யூதர்களின் தவ்ராத் வேதம் அருளப்பட முன் நடைமுறையில் இருந்த உருவ வழிபாட்டு முறைகளும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி நாட்டின் பிரீமேசன்களில் ஒருவரான Murat Ozgen என்பவர் எழுதிய What Is Freemasonry ? What Is It Like ?  என்ற நூலில் KABBALAH  பற்றி இவ்வாறு கூறுகிறார்.

" KABBALAH எப்போது எங்கிருந்து எப்படி உருவானதென்பது பற்றி எங்களுக்கு அவ்வளவு தெரியாது.ஆனால் அது தனித்துவமான வாழ்வின் மெய்ப்பொருளை அறியக் கூடிய யூத மதத்துடன் தொடர்புள்ள ஒரு விசித்திரமான வாழ்வியல் தத்துவம்.இத் தத்துவம் யூத மதத்தில் ஏற்றுக் கொல்லப்பட்ட ஒரு விடயம்.ஆனால் இந்த KABBALAH வில் யூத மதத்துக்கு முற்பட்ட காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறைகளும் அடங்கியுள்ளன."
(REF: What Is Freemasonry ? What Is It Like ? P: 298,299 )


பிரஞ்சு வரலாற்றாசிரியர் Gogenot Des Mousseaux என்பவரின் விளக்கத்துக்கு அமைய KABBALAH கலையில் யூத மதத்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட சில முக்கியமான சடங்குகளும் அடங்கியுள்ளன.


யூத வரலாற்றாசிரியரான Theodore Reinach என்பவற்றின் கருத்துக்கு அமைய KABBALAH என்பது யூத மதத்தில் மிக நுட்பமாக புகுந்த ஒரு கொடிய விஷம்.அது முழு யூத மதத்தையும் நாசப்படுத்தி விட்டது என்கிறார்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றிவரும் பல மந்திர சடங்குகளில் KABBALAH என்ற இந்த கலையே அடித்தாலமாக விளங்குகிறது.சில யூத ரப்பிகள் கூட இந்தக் கலை மந்திர சக்திகளைக் கொடுக்கும் என நம்பி கற்றும் உள்ளார்கள்.யூத மதம் சாராத இன்னும் பலரும் இந்த கலையை கற்றார்கள்.வரலாற்றின் மத்திய காலப் பகுதியின் இறுதிக் கால கட்டங்களில் இந்த ரகசிய போக்குடைய கொள்கைகள் ஐரோப்பாவில் காலடி எடுத்து வைத்தது.

ஓரிறைக் கொள்கையை சுமந்து கொண்டு தவ்ராத் வேதம் அருளப்பட்டு மூஸா (அலை) அவர்களால்  வழிநடத்தப்பட்ட யூத மதம் இந்த கலையின் ஆரம்ப அச்சாணி என்பது ஆச்சரியமான விடயம்.உண்மையில் KABBALAH எனும் இந்தக் கலையில் யூத மதத்துக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத பல சடங்குகள் உள்வாங்கப்பட்டு அது யூத மார்க்கம் ஆக்கப்பட்டதே உண்மை. 


அப்படியெனில் இந்த கலையின் ஆரம்பப் புள்ளி எங்கே உள்ளது ???

ன்ஷா அல்லாஹ் தொடரும்........



முன்னைய ஆக்கத்தைப் படிக்க இங்கே கிளிக்குங்கள்.






உங்கள் நண்பன் 
எம்.ஹிமாஸ் நிலார்








Sunday, March 11, 2012

ப்ரீமேசனரி - பயங்கர இரகசிய சமுதாயம்.



  
  
 ப்ரீமேசனரி ( FREE MASONARY ) பல நூற்றாண்டுகளாக உலகில் பல்வேறு கோணங்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.இந்த பயங்கர இரகசிய சமுதாயத்தைப் பற்றிய பல்வேறு விடயங்கள் இதனைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் ஆராயப்படும்.



KNIGHT TEMPLARS  முதல் பண்டைய எகிப்து வரை
ப்ரீமேசனரி பற்றி எழுதும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்துக்கு அமைய இந்த இரகசிய சமுதாயத்தின் ஆரம்பம் சிலுவை யுத்தம் வரை செல்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டில் அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டாலும் இந்த இரகசிய சமுதாயத்தின் வேர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நடந்த சிலுவை யுத்தங்கள் வரை செல்கிறது.இது முதன்முதலில் இங்கிலாந்திலே அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.சிலுவை யுத்தம் என்ற பேரில் பலஸ்தீனை மீட்க கிருஸ்தவர்கள் புறப்பட்டாலும் அதற்கு முக்கியமான காரணம் பொருளாதார ஆதாயமேயாகும்.ஏனெனில் சிலுவை யுத்தம் ஆரம்பிக்கும் போது ஐரோப்பா வறுமையிலும் தும்பத்திலும் புரண்டு கொண்டிருக்க இஸ்லாமிய மத்திய கிழக்கு அறிவிலும் செல்வத்திலும் செழித்து காணப்பட்டது என்பதே ஐரோப்பியர்களை இஸ்லாமிய உலகம் மீது வெகுவாக ஈர்க்க காரணமாக இருந்தது.

ஐரோப்பிய மன்னர்களின் இந்த பொருளாசையை பூர்த்தி செய்து கொள்ள அந்த மன்னர்கள் கிருஸ்தவ மதத்தின் பெயரில் சிலுவைப் போரில் குதித்தனர். ஐரோப்பிய மன்னர்களின் பொருளாசையை நிறைவு செய்து கொள்ள நடந்த போர்களில் சம்பந்தம் இல்லாமல் சிலுவைகள் பயன்பட்டன.

council of clermont
   சிலுவை யுத்தத்தின் ஆரம்பகர்த்தா போப் ஏர்பன் II ஆவார்.கிருஸ்தவர்கள் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த அமைதிவாதக் கோட்பாட்டை கைவிட்டு விட்டு 1095 இல் council of clermont இல் சிலுவை யுத்தத்தை பிரகடனம் செய்தார்.சிலுவை யுத்தத்தின் வெளிப்படையான நோக்காமாக முன்வைக்கப்பட்டது முஸ்லிம்களின் கைகளிலிருந்து புனித பூமியை கைப்பற்றுவதேயாகும்.ஆனால் அதை தாண்டி பாரிய உள்நோக்கம் ஒன்று இருந்தது.இப்படி பிரகடனம் செய்யப்பட யுத்தத்துக்கு இரண்டு தொழில் முறை போர் வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கில் சாதாரண மக்கள் சேர்த்துக் கொல்லப்பட்டனர்.

பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய போப் ஏர்பன் II இன் இந்த சிலுவை யுத்த பிரகடனத்துக்கு ஒரு காரணம் அவருக்கு போப் பதவி மேல் இருந்த ஆசையாகும் , இப்படி புனித பூமி கதையை மக்களிடம்ஸ் சொல்லி அவர் தனக்கு மக்களிடையே ஆதரவை திரட்டவே சிலுவை யுத்தத்தை பிரகடனம் செய்தார்.இதன்மூலம் தனக்கு போட்டியாக உள்ள மற்ற பதியார்களை  மட்டம் தட்டப்பார்த்தார்.மேலும் ஐரோப்பிய அரசர்கள் இளவரசர்கள் உயர்குடியினர் என்போர் போப்பின் இந்த யுத்த பிரகடனத்தை சந்தோசமாக வரவேற்றனர்.இவர்கள் அனைவரினதும் நிலம் பிடிக்கும் நோக்கம் கிருஸ்தவ மதத்தின் பெயரில் யுத்தமாகா அரங்கேறியது.

University Of Illinois இன் பேராசிரியர் Donald Queller இன் கருத்துக்கு அமைய பிரெஞ்சு Knights களுக்கு அதிக நிலம் தேவைப்பட்டது,இத்தாலிய வியாபாரிகள் மத்திய கிழக்கு துறைமுகங்களில் தமது வர்த்தகத்தை விரிபுபடுத்த ஒரு தருணத்தை பார்த்துக் கொண்டிருந்தன,ஐரோப்பிய நாடுகளில் தாண்டவமாடிய வறுமையிலிருந்து தப்பித்துக் கொள்ள சாதாரண மக்கள் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர்.இப்படி எல்லா காரணங்களும் இந்த யுத்தத்தை முன்னெடுக்கவே சார்பாக இருந்தது.சிலுவையின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராசைக்கார யுத்தம் நடைபெற்ற வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு மரணத்தை தழுவச் செய்தது.

ஜெருசல முற்றுகையும் வீழ்ச்சியும்.

சிலுவை வீரர்களின் மிக நீண்ட கடினமான மற்றும் படுகொலைகள் கொள்ளைகள் நிறைந்த ரத்தவாடை எங்கும் அடித்த பயணத்தின் முடிவு 1099
புனித நகரான ஜெருசலத்தில் நிறைவு பெற்றது.ஐந்து வார முற்றுகையின் பின் ஜெருசலம் சிலுவை வீரர்களின் படைகளிடம் வீழ்ந்த்தது.சிலுவை வீரர்களிடம் வீழந்த புனித ஜெருசல நகரம் சின்னாபின்னமாகிப் போனது.அங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் யூதர்களும் கிறிஸ்தவத்துக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத முர்க்கக் குணமும் பொருளாசையும் நிறைந்த சிலுவை வீரர்களின் வாள்களுக்கு இரையானார்கள்.இவர்கள் புனித நகரை ஆக்கிரமித்து வெறும் இரண்டு நாட்களுக்குள் 40000 மேற்பட்ட முஸ்லிம்களை படுகொலை செய்தனர்.இதன் பின்பு இந்த சிலுவை வீரர்கள் ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனத்திலிருந்து Antioch வரை எல்லைகளைக் கொண்ட ஒரு லத்தீன் ராஜ்ஜியம் ஒன்றை அங்கு நிறுவினார்கள்.



THE KNIGHT TEMPLARS




The Templars அல்லது Soldiers Of Chirst அல்லது Soldiers Of Temple Of Solomon
இப்படி பல பெயர்கள் இவர்களுக்கு உள்ளன.ஆனால் பொதுவாக பாவிக்கப்படும் பெயர்தான் Knight Templars.இந்த இயக்கம் 1119 இல் அதாவது ஜெருசலம் சிலுவை வீரர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின்பே நிறுவப்பட்டது.இந்த இயக்கம் இரு பிரஞ்சு Knights களால் ஆரம்பிக்கப்பட்டது.Hugues De Payens மற்றும் Godfrey De Saint Omer என்ற இரு பிரெஞ்சு Knights களால் ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் முதலில் சிறிய அளவிலேயே இயங்கியது,ஆனால் குறுகிய காலத்தில் அதன் வளர்ச்சி நினைத்ததை விட அதிகமாகவே இருந்தது.இவர்கள் தங்களை "ஏழை வீரர்கள்" என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டனர்.ஆனால் நிலைமையோ வேறுவிதமாக  இருந்தது.இவர்கள் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தர்களாக மாறினார்கள்,அதற்கு காரணமும் இருந்தது.ஜெருசல நகரம் சிலுவை வீரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததன் பின் ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கில் யாத்திரிகர்கள் புனித நகரை தரிசிக்க வந்தனர்.இந்த யாத்திரை முழுவதும் இந்த Knight Templars ஸின் கையிலேயே இருந்தது.இதனை கொண்டு அவர்கள் பெரும் செல்வந்தர்களாக மாறினார்கள்.

கி.பி. 1162 இல் மன்னர் இரண்டாம் ஹென்றி ஜெருசலத்தில் உள்ள சிலுவை வீரர்களுக்கு உதவும் பொருட்டு மக்களிடம் வரி வசூலித்து வந்தார்.இப்படி வசூலிக்கப்பட்ட பெரும் தொகையானா பணம் Knight Templars ஊடாகவே வீரர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.Knight Templars இதன்போது  நவீன வங்கி முறைக்கு அடித்தாளம் இட்டனர்.காசோலை மற்றும் கடன் முறைமைகள் இக்காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.Micheil Bigent மற்றும் Richard Liegh என்ற இரு பிரித்தானிய வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய மத்தியகாலத்தில் முதலாளித்துவத்தை நிறுவியவர்கள் இந்த Knight Templars.கிருஸ்தவ மதத்தில் வட்டி தடை செய்யப்பட்டு இருந்தாலும் இவர்கள் தாங்களின் வங்கி முறைமைக்கு வட்டியை அடிப்படையக்கிக் கொண்டனர்.  

இஸ்லாமிய உலகின் தலைசிறந்த தளபதி சலாஹுத்தீன் அய்யூபி அவர்களால்  கி.பி.1187 இல் ஜெருசலம் சிலுவை வீரகளிடமிருந்து மீட்டப்பட்டது.Battle Of Hattin என்று அழைக்கப்படும் 1187 இல் நடந்த அந்தப் போரில் 17000 க்கும் மேற்பட்ட சிலுவை வீரர்கள் இறந்தனர்.இதில் Knight Templars க்கும் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

இந்த போரில் Knight Templars க்கு கிடைத்த தோல்வி அவர்களுக்கு ஐரோப்பாவில் தமது ஆதிக்கத்தை பரப்ப ஒரு வாய்ப்பாக அமைந்தது.முதன்   முதலாக  இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்த நாடு பிரான்ஸ் ஆகும்,அதன் பின்பு ஒன்றன் பின்பு ஒன்றாக பல ஐரோப்பிய நாடுகள் இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

Knight Templar ஸின் அரசியல்ரீதியாக எழுச்சி ஐரோப்பிய மன்னர்களின் உள்ளத்தில் ஒருவித அச்சத்தைக் கொடுத்தது.எழுச்சி பெற்றுவரும் இந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க சில ஐரோப்பிய மன்னர்கள்  ஒரு  தருணம் வரும்வரை பார்த்திருந்ததனர்.ஜெருசலத்தில் Knight Templar ஸின் அதிகாரம் ஓங்கியிருந்த காலத்தில் அவர்கள் அங்கு இஸ்லாத்துக்கு முன் நிலவி வந்த விசித்திரமான போதனை முறைகளை கற்றுக்கொண்டுஅதனை வர்களின் நாளாந்த செயற்பாட்டில் இணைத்துக் கொண்டனர்.இது கிருஸ்தவ மதத்துக்கு  முற்றாக  மாறு செய்வதாகவே இருந்தது.மேலும் இவர்கள் அந்த விசித்திரமான போதனை முறைகளுக்கு சடங்குகளும் ஏற்பாடு செய்துவந்ததாகவும் வதந்திகள் பரவின.

கடைசியாக, இப்படிப்பட்ட ஒரு தருணம் வரும்வரை காத்திருந்த ஐரோப்பிய மன்னர்கள் செயலில் இறங்கி அவர்களை அதிர்க்க ஆரம்பித்தனர்.1307 இல் பிரெஞ்சு மன்னர் பிலிப்பே லே பெல் Knight Templar சின் அங்கத்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.சிலர் இந்த கைதுகளிலிருந்து தப்பித்து கொண்டாலும் பலர் கைது செய்யப்பட்டனர்.மிக நீண்ட நாட்களாக தொடர்ந்த விசாரணை மற்றும் சோதனைகளுக்குப் பிறகு Knight Templar இயக்க அங்கத்தவர்கள் குற்றவாளிகள்  என்று தீர்ப்பு வழங்கப்பட்டு அதன் பல அங்கத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அதன் தலைவன் Jaques De Moley இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு அடுத்த நிமிடமே பிரெஞ்சு அரச சபையாலும் தேவாலயத்தாலும் Knights Templar இயக்கம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது.அதோடு அவ்வியக்கம் இல்லாமல் போனது.

Knight Templar மீதான விசாரணையின் முடிவு அவ்வியக்கத்தின் முடிவாகவே அமைந்தது.அவ்வியக்கம் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டாலும் அது உண்மையில் மறைந்து அழிந்து விடவில்லை.1307 இல் இடம்பெற்ற திடீர் கைதுகளிலிருந்து தப்பிய சில Knight Templar இயக்க அங்கத்தினர்கள் தன இயக்கத்தின் செயற்பாடுகளை மிக ரகசியமாக செய்து வந்தனர்.பல்வேறு வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இந்த இயக்கத்தின் அங்கத்தவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஐரோப்பிய நாடு ஸ்காட்லான்ட் ஆகும்.
பதினான்காம் நூற்றாண்டில் கத்தோலிக்க ஆலயங்களின் அதிகாரத்தை மதிக்காத ஒரே ஒரு நாடு ஸ்காட்லான்ட் ஆகும்.இவ்வியக்கத்தினர் ஸ்கொட்டிஷ் மன்னன் ராபர்ட் தி ப்ரூஸ் (Robert The Bruce) இன் பாதுகாப்பின் கீழ் தம் கொள்கைகளை மீள்நிர்மானம் செய்து வந்தனர். 

King Robert The Bruce
Knights Templar இயக்கம் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டாலும் அது மரணிக்கவில்லை,அவர்களின் மாறுபட்ட தத்துவங்கள் கொள்கைகள் மற்றும் சடங்குகள் ப்ரீமேசநரி என்ற புனைப் பெயரில் தொடர்ந்தது நடந்துவந்தது.இன்றும் அது நடக்கிறது.இது மேற்கத்தைய பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையாகும். 



இன்ஷா அல்லாஹ் தொடரும்............ 





ன்ஷா அல்லாஹ் இந்த பயங்கர இரகசிய சமுதாயம் பற்றி நிறைய விடயங்களை  வரும் ஆக்கங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.
துஆ செய்யவும்.

உங்கள் நண்பன் 
எம்.ஹிமாஸ் நிலார்
  











Wednesday, March 7, 2012

சூனியம் - ஒரு பார்வை


விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்கள் சிந்திக்கத் தவறியதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'சூனியம்' என்பதும்.

ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டால் போதும், அந்த சூனியத்தின் மூலமாக அவனைக் கொல்லவோ, கை கால்களை முடக்கவோ, தீராத நோய்களை உண்டாக்கவோ முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இன்னும் சூனியத்தால் பல அற்புதங்கள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.

இவர்கள் நம்புவது போன்று சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்றிருப்பின், தமக்குப் பிடிக்காத ஒரு சாரார் மற்றொரு சாராரை சூனியம் செய்து கொன்று விடலாமல்லவா? ஏன் கத்தி களையும், தடிகளையும் பெரும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு கலவரம் செய்து கச்சேரி செல்ல வேண்டும்? சரி, குறைந்த பட்சம் சூனியம் செய்பவர்கள் அவர்களின் தொழிலிற்கு இடைறாக இருப்போரையாவது கொன்று சூனியத்தின் சக்தியை நிரூபிக்கலா மல்லவா?

பலர் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது ஏன்? எப்படி? என்று நமக்குச் சந்தேகம் எழுவது எதார்த்தமானதே.! இதை நாம் நன்றாக அறிந்து கொண்டால் இவ்வாறு ஏற்படும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம்.

சூனியம் என்பது மனதைக் குழப்பும் ஒரு கலை, இந்த கலையைச் செய்வதால் அவர்கள் மனக்குழப்பத்திற்கு உள்ளாகி சூனியத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் எவ்விதப் பாதிப்பையும் சூனியம் ஏற்படுத்துவதில்லை.

ஒரு மனிதன் நன்றாகவே இருப்பான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. அவனிடம் எவனாவது உனக்கு இன்ன ஆள் சூனியம் செய்து விட்டான் என்று மட்டும் கூறிவிட்டால் போதும், அவன் தன் மனதில் பல கற்பனைகளை வளர்த்து குழப்பமடைந்து தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று எண்ணும் காரணத்தால் இவனாகவே பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறான்.

உண்மையை அறிய வேண்டுமானால் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனைச், சோதிப்பதற்காக உனக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிப் பாருங்களேன்! அன்று முதலே அவன் அதிர்ச்சியில் அலைவதைக் காண்பீர்கள்.

 சூனியம் மனிதனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுத்தப் பொய். இதைத் தெளிவாக தெரிந்தும் கூட மார்க்க அறிஞர்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் தகடு, தாயத்து, முட்டையில் எழுதுதல், அஸ்மா வேலைகள் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். இறைவனுடைய பாதையைவிட்டும் மக்களை வழிதவறச் செய்கின்றனர். இந்த லெப்பைகள் தங்கள் தொப்பைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மனித இனத்தை வழிகெடுப்பதைப் பார்க்கும் சிலர் இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்று எண்ணுகிறார்கள். அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளட்டும், இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்பது கடுகளவும் கிடையாது. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்பு åதர்கள் தங்கள் கைச்சரக்குகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் புகுத்தியதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன.

ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற்கு ஏற்பச் சட்டங்களை வளைத்துக் கொள்வது இஸ்லாமியச் சட்டமாகவோ கொள்கையாகவோ ஆகிவிடாது. இறைவனால் கொடுக்கப்பட்ட குர்ஆன் கூறுவதும்; அவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காண்பித்த வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.

சூனியம் செய்து மூட நம்பிக்கைகளை உண்டாக்கி வழி கெடுப்பது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 சூனியம் என்பது ஒரு கலை தானே, அதை ஏன் இஸ்லாம் தடைசெய்கிறது என்று நமக்குச் சந்தேகம் எழலாம். நன்மையான செயல்களை உண்டாக்கும் கலை என்றால் அதை இஸ்லாம் நிச்சயம் தடை செய்திருக்காது. ஆனால் சூனியக்கலை மக்களை இறை நிராகரிப்பிற்கு இழுத்துச் செல்வதாலும் மக்கள் ஏமாற்றப்படுவதா லும் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது.


கண்களை ஏமாற்றுவதே சூனியம்


மூஸா(அலை) அவர்களை எதிர்ப்பதற்காக பிர்அவ்ன் சூனியக் காரர்களை ஒன்று திரட்டினான். அவர்கள் செய்த சூனியம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

(அவர்கள் எறிந்த) கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்கு மூஸா(அலை) தோன்றியது. (அல்குர்ஆன் 20.66)

அந்த சூனியக்காரர்கள் எறிந்த கயிறுகளும், தடிகளும் பாம்புகளாக மாறவில்லை; பாம்புகள் போன்று தான் காட்சியளித்தன என்று இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். இந்த வசனத்தில் இறைவன்''யுகய்யலு'', என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யுள்ளான். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பித்தல், மாயையை ஏற்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.

சூனியம் (ஸிஹ்ர்) என்ற கலையின் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பிக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படியானால் அதைக் கொண்டு ஏதும் தீங்கு செய்ய முடியுமா என்ற ஐயம் வரலாம்.

சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20.69)

''கணவன் மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.'' (அல்குர்ஆன் 2.102)

என்னதான் சூனியம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது. அப்படியே அது தீங்கு செய்தாலும் மனதில் குழப்பத்தை உண்டாக்கி, கணவன் மனைவிக் கிடையே பிரிவினையைத்தான் உண்டு பண்ண முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதையும் இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக்கி விட்டான்.

ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க ஏற்படுத்திய சசூழ்ச்சிகளில் ஒன்றுதான் சூனியம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.

நீ என்னைக் கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமின் சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன். பின்பு நிச்சயமாக நான் அவர்கள் முன்பும், அவர்கள் பின்பும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (வழிகெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் கையாண்டு அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:16,17)

உன் கண்ணியத்தின் மீது ஆணையாக, அவர்களில் அந்தரங்கச் சுத்தியான உன் அடியார்களைத் தவிர நிச்சயமாக அவர்கள் யாவரையும் நான் வழிகெடுப்பேன் என்றும் (இப்லீஸ்) கூறினான்.

(அதற்கு) அதுவே உண்மை; உண்மையையே நானும் கூறுகிறேன். நிச்சயமாக உன்னைக் கொண்டும், உன்னைப் பின்பற்றுவோர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் 38:82-85)

மனிதனை வழிகெடுத்து நரகத்தில் சேர்ப்பதற்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஷைத்தான் கையாண்டு வழிகெடுப்பான் என்பதும் அதற்கு இறைவனும் அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் என்பதும் மேற்காணும் வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது.

இன்று ஷைத்தான் பல வழிகளிலும் மனிதனுடைய உள்ளத்தில் ஊடுருவி வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான். அவற்றில் ஒன்று தான் சூனியம் என்பது.

ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். (அல்குர்ஆன் 2:102)

ஷைத்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து அந்த சூனியக்காரர்களுக்கு அவன் உதவி செய்யும் காரணத்தால்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கணவர் மனைவியிடையே பிரிவினையை உண்டாக்க முடிகிறது.

மனதில் குழப்பத்தை உண்டாக்குவதில் ஷைத்தான் மிகத் தீவிரமானவன், திறமையானவன்!

எனினும் (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவருக்கும் மறைந்திருக்கும் அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்.

ஆதம்(அலை) அவர்களையே ஆட்டிப் பார்த்த அவனுக்கு, பிற மனிதர்களை வழிகெடுப்பது ஒன்றும் கடினமல்ல. பிறருடைய உள்ளத்தில் ஊசலாட்டம் செய்வது, அவனுக்கு இலகுவான செயல்! அந்த அடிப்படையில் சூனியத்தின் மூலம் மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி அவர்களைக் கோவில், தர்கா, போன்ற இடங்களுக்கோ அல்லது சூனியக்காரன் வசிக்கும் இடத்திற்கோ இழுத்துச் சென்று இறைமறுப்பாளர்களாக ஆக்கி தன் இலட்சியத்தில் வெற்றி காண்கிறான்.

இதை அறியாத மக்கள் அவனுடைய அச்சசூழ்ச்சிக்குள்ளாகி தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றனர். ஷைத்தானுடைய சூழ்ச்சி எப்படி இருப்பினும் உண்மையான இறை நல்லடியார்களிடம் அது செல்லாது என்பதையும் 38:33 வது வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.

''சூனியம், ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று'' நல்லடியார்களிடம் ஷைத்தானுடைய சூழ்ச்சி செல்லாது என்றால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு ஏன் சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஐயம் இப்போது நமக்கு வந்திருக்கும்.

ஆம்! இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை தான். அதன் விளைவாக அவர்கள், தாம் செய்த வேலையைச் செய்யவில்லை என்றும், தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்றும் எண்ணிக்கொண்டு சிறிது காலம் மனத்தடுமாற்றத்தில் இருந்தார்கள். தாம் சூனியம் செய்யப்பட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் தான் வானவர்கள் மூலம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு தீர்வையும் கூறினான் என்பதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் வாயிலாக அறிகின்றோம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்கள், தாம் செய்யாத ஒரு செயலைச் செய்திருப்பதாக அவர்களுக்கு(குறுகிய காலத்தில்) மாயை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாம் செய்யாத செயலைச் செய்தது போன்று மாயை ஏற்படும் அளவிற்கு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் பிரார்த்தனை செய்த வாறு இருந்தார்கள். அதன் பிறகு : ''என்(மீது செய்யப்பட்டுள்ள சசூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ, அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு நபர் (இருவானவர்களான ஜிப்ரயிலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரயில்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என் கால்மாட்டில் அமர்ந்தார்.

ஒருவர் மற்றொருவரிடம் ''இந்த மனிதரை பீடித்துள்ள நோய் என்ன'' என்று கேட்டார். மற்றொருவர்(ஜிப்ரீல்) ''இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர் ''இவருக்கு சசூனியம் செய்தது யார்?'' என்று கேட்டார் .அவர்(பதிலுக்கு) ''லபீத் இப்னு அஃஸம் (என்னும் åதன்)'' என்று பதிலளித்தார். ''(அவன் சூனியம் வைத்தது) எதில்?'' என்று அவர்(மீக்காயில்) கேட்க அதற்கு, ''சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண்(பேரிச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ''அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, ''(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில் '' என்று பதிலளித்தார்கள் என்று, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிவிட்டு அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ''அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், ''அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான்.(அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே(சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்ததும் அது நிகழ்ந்ததும் உண்மையென்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்கத் தவறி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கே சூனியம் பாதித்துவிட்டது என்றால் அது நம்மை விட்டு வைக்குமா என்று மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் இறைவன் நமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்துள்ளான். நாம் அவற்றைக் கவனிக்க வேண்டும்.

1. சூனியம் என்பது மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்துவிடாது.

2. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் மனிதர்தான். அவர்கள் இறைத்தன்மையைப் பெற்றவரோ, வானவர்களின் பண்புகளைப் பெற்றவரோ இல்லை. இறைத்தூதர் என்பதால் மனிதர்களில் உயர்ந்தவர் என்ற சிறப்புதான் அவர்களுக்கு உண்டு.

3. ஒருவன் மற்றொருவனுக்கு, சூனியம் செய்துவிட்டால், அதை சசூனியம் செய்யப்பட்டவன் அறிந்து கொள்ள முடியாது அல்லது மற்றொரு சூனியக்காரனிடம் சென்று கேட்டாலும் அவனும் அதை அறிந்திருக்க முடியாது. அப்படி யாரும் அறிந்து கொள்ள முடியும் என்றிருப்பின் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் முதலில் அதை அறிந்திருக்க முடியும். அவர்களுக்கே அல்லாஹ்தான் தன் வானவர்கள் மூலமாக அறிவித்தான். ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டான் என்பதை சசூனியம் செய்தவனும் அல்லாஹ்வும் மட்டுமே அறிய முடியும். எனவேதான் சூனியம் செய்யப்பட்டிருப்போமோ என்று எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.

4. அப்படியே தனக்கு சூனியம் செய்யப்பட்டதை ஒருவன் அறிந்து கொண்டாலும், அதற்கான தீர்வு உலகத்தில் எங்கும் கிடையாது. அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே அவனிடமே பாதுகாப்பு தேட வேண்டும். சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை அருளி இறைவன் தன்னிடம் மட்டுமே ஒவ்வொரு தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் சமுதாயத்தினருக்கும் கட்டளை யிட்டுள்ளான்.

இறைவன் காட்டித்தந்துள்ள, தீர்வை விட்டு விட்டு நாம் நமது விருப்பத்திற்கு இணங்கி கோவில், தர்கா போன்ற இடங்கள் சென்று தீர்வைத் தேடினாலோ மற்றொரு சூனியக்காரனிடம் சென்று தீர்வைக் கேட்டாலோ நிச்சயம் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை.

வானவர்கள்தான் மனிதர்கள் மத்தியில் சூனியத்தை பரப்பினார்கள் என்றும் ஒரு கதை கட்டி விடப்பட்டுள்ளது. இது யூதர்களின்  நாச வேலையில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வானவர்கள் ஒரு போதும் சூனியத்தைப் பரப்பவில்லை என்ற விஷயத்தை 2:102 வசனத்தின் விளக்கவுரைகளை நன்றாகக் கவனிக்கும் போது நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த அளவிற்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கி மக்களைக் கெடுக்கும் சூனியத்தை எவன் செய்கின்றானோ அவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். இப்பெரும் பாவத்திலிருந்து இறைவன் மனித இனத்தைக் காப்பானாக!





ஆக்கம் 

M.M.அப்துல் காதிர் உமரி
"அந்த ஏழு பாவங்கள்"




Friday, March 2, 2012

பொதுச் சொத்து - எச்சரிக்கை



இப்னு அப்பாஸ் (ரழி), தனக்கு உமர் (ரழி) அவர்கள் தெரிவித்ததாகப் பின்வரும் சம்பவத்தை அறிவிக்கின்றார்கள் : கைபர் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி 'அவர் ஷஹீத், இவர் ஷஹீத்', என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள் 'இவரும் ஷஹீத்' என்றனர். அதுகேட்ட நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அப்படிக் கூற வேண்டாம். அவர் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களில் ஒன்றான ஓர் ஆடையை அல்லது மேலங்கியைத் (திருட்டுத் தனமாக) அபகரித்துக் கொண்டார். அந்த ஆடையுடன் அவரை நான் நரகில் கண்டேன்'' என்று கூறி விட்டு,  ''உமர் இப்னு கத்தாபே! நீர் சென்று முஃமீன்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள்'' என்று மக்களுக்கு மத்தியில் சொல்வீராக'' என்றார்கள்.
 
(ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுல் ஈமான் - 182)


யுத்தத்தின் போது எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட (கனீமத்) பொருட்களிலிருந்து ஓர் ஆடையைத் திருட்டுத்தனமாக அபகரித்துக் கொண்ட நபருக்கு நேர்ந்த கதி இந்த ஹதீஸில் சித்தரிக்கப்படுகிறது. பொதுச் சொத்துக்களை அபகரிப்போர், அவற்றில் கையாடல் செய்வோர், அதிகாரத்தைப் பயன்படுத்தி தம் சொந்த நலன்களை ஈட்டிக் கொள்வோர் போன்றோருக்கு இந்த ஹதீஸில் மிகுந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதைக் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் கனீமத் பொருட்களை அல்லாஹ் கூறிய பிரகாரமே பங்கிடுவார்கள். ஆனால், அவ்வாறு உத்தியோகப்பூர்வமாக அப்பொருட்கள் பங்கிடப்படு முன்னர் அப்பொருட்களில் ஏதாவது ஒன்றையோ பலதையோ தனிப்பட்ட முறையில் திருடுவது குற்றமாகும். 'குலூல்' எனப்படும். இது பெரும் பாவங்களில் ஒன்று என்பது இஜ்மாவான முடிவு என இமாம் நவவி (ரஹ்) கூறுகின்றார்கள்.

நாம் விளக்க எடுத்துக் கொண்ட ஹதீஸிலிருந்து பல உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

அல்லாஹ் மார்க்கத்திற்காக நடைபெற்ற யுத்தமாயினும் அதில் கிடைத்த கனீமத்தை அது பங்கிடப்பட முன்னர் ஒருவர் திருடினால் அவர் நரகம் நுழைவார்.

அவரது ஈமானிலும் அது பாதிப்பை உண்டு பண்ணும்.அவர் மோசடி செய்த பொருள் அற்பமானதாயினும் சரியே.ஜிஹாதில் ஈடுபட்டார் என்ற சிறப்பை அவர் பெற மாட்டார். அதாவது ஷஹீத் எனப்பட மாட்டார்.அவர் கொல்லப்பட்டால் புனித உயிர்த்தியாகத்தின் சிறப்புக் கிட்டாது.



அற்பமானதாக இருப்பினும் சரியே


ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ள இன்னுமொரு அறிவிப்பில், கைபர் யுத்தத்தின் போது எதிரிகளது அம்பெய்தலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்ட ஒருவரைப் பார்த்து 'அவர் உயிர்த்தியாகம் செய்திருப்பதால் வாழ்த்துக்கள்' என ஸஹாபாக்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு ''முஹம்மதின் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் (அல்லாஹ்) மீது ஆணையாக கைபரில் கிடைத்த கனீமத்கள் பங்கிடப்படுவதற்கு முன்னர் அவற்றிலிருந்து அவர் அபகரித்த ஒரு சிறிய போர்வை (ஷம்லா) அவர்மீது நெருப்பாகப் பற்றி எரிகிறது'' என்றார்கள். இதுகேட்டு மக்கள் பதட்ட முற்றிருக்கையில் செருப்பின் ஒரு தோல் வார் அல்லது இரண்டு வார்களை எடுத்துக் கொண்டு அங்கு வந்த ஒரு நபர் 'இவை கைபரில் நான் (திருட்டுத்தனமாகக கனீமத்திலிருந்து) எடுத்தவை' என்றார். அதுகேட்ட நபியவர்கள் ''நெருப்பிலான ஒரு வார் அல்லது நெருப்பிலான இரண்டு வார்கள்'' என்றார்கள்.

 (ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுல் ஈமான் - 183)

அதாவது செருப்பு வாரை அபகரிப்பவர் கூட அதனை அணிந்த வண்ணம் நரகில் இருப்பார் என்பதே இதன் பொருளாகும். இந்த வாரின் காரணமாகத் தான் அவர் நரகில் நுழைவார் என்றும் பொருள் கொள்ள முடியும். மேலுள்ள ஹதீஸில் வந்துள்ள போர்வை விசயமாகவும் இவ்விளக்கத்தையே கூறலாம்.

ஸஹீஹுல் புஹாரியில் வந்துள்ள மற்றொரு ஹதீஸில் கர்கரா என்பவர் யுத்த சந்தர்ப்பத்தில் ஆடையொன்றை அபகரித்ததால் அவரும் நரகவாதி என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (கிதாபுல் ஜிஹாத் - 190)

கைபரின் போது இறந்த இன்னுமொரு நபருடைய ஜனாஸாவுக்கான தொழுகையை நடாத்தி வைப்பதற்கு நபியவர்கள் மறுத்தார்கள். அப்போது அங்கிருந்தோர் ஆச்சரியமுள்ளு ''அவர் அல்லாஹ்வின் பாதையில் போராடிக் கொண்டே யுத்தப் பொருளைத் திருடியிருக்கின்றார்'' என்று நபியவர்கள் கூறியதாகவும் அவரது பொட்டலங்களை ஸஹாபாக்கள் ஆராய்ந்து பார்த்த போது இரண்டு திர்ஹம்கள் கூட பெறுமதியற்ற யூதர்களது ஆபரணமொன்று அங்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஆதாரம் : மாலிக் - ஜிஹாத் - பக்.458, அஹ்மத் : 4-411, அபூதாவூத் - 2710, நஸஈ - 4:64, இப்னு மாஜா – 2848, ஹாகிம் - 2:127)

இங்கும் கூட இரண்டு திர்ஹம்கள் திருடப்பட்டமைக்காக அவர் மீது தொழுகை நடாத்த நபியவர்கள் மறுத்தமை பொதுச்சொத்தில் - அது சிறியதாயினும் பெரியதாயினும் எவரும் ஆசைவைக்கலாகாது என்பதை உணர்த்துவதற்காகும்.

அந்த ஹதீஸ்களிலிருந்து அடியார்களுடன் தொடர்பான உரிமைகள் (ஹுகூகுல் இபாத்) எவ்வளவு தூரம் மதிக்கப்பட வேண்டும் என்பதைப் புரிய முடியும். குறிப்பாக சொத்துக்களில் - அவை தனி மனிதர்களுக்குரியவையாகவோ பொதுச் சொத்துக்களாகவோ இருப்பினும் அவற்றில் - நியாயமற்ற விதத்தில் கைவைப்பது, அனுபவிப்பது பாரதூரமான குற்றமாகும். அவை அற்பமானவையாக இருப்பினும் சரியே. முதலில் கொஞ்சம் எடுப்பவன் காலப் போக்கில் அதிகமாக எடுப்பதற்குத் தலைப்பட்டு விடுவார் என்பதனாலேயே இந்தக் கடுமையான தண்டனைக்கு அவர் உள்ளாக்கப்படுகின்றார்.



அம்பலப்படுத்தல்


கனீமத் பொருட்களில் திருடுபவர் அந்தப் பொருட்களுடனேயே மறுமையில் வந்திருப்பார் என குர்ஆனும் ஹதீஸும் தெளிவாகவே குறிப்பிடுகின்றன. அந்த நபர் திருடியிருப்பது யாருக்கும் பொதுவான சொத்து என்பதால் தான் அல்லாஹ் அந்த நபரைப் பலருக்கு மத்தியில் அம்பலப்படுத்துகிறான்.

''(யுத்த பொருட்களில்) அபகரித்தவர் தான் அபகரித்த பொருட்களுடனேயே மறுமையில் வந்து நிற்பார்' என (3:61) அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ள பிரிதொரு ஹதீஸின் சுருக்கமாவது, யுத்தப் பொருட்களில் ஆடு, குதிரை, ஒட்டகம் என்பவற்றை யாராவது ஒரு போராளி திருடினால் சுமந்து கொண்டு வருவார். அவை ஒவ்வொன்றும் சப்தமிடும். அப்போது அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'என்னைக் காப்பாற்றுங்கள்: என்று கூக்குரலிடுவார். ''உலகில் இருக்கும் போது நான் உனக்கு (தெளிவாகவே இவ்வாறு யுத்தப் பொருட்களில் மோசடி செய்வது) தவறு என்று கூறியிருக்கிறேன். எனவே, என்னால் உனக்கு எதனையும் செய்ய முடியாது'' என்று நபி (ஸல்) கூறுவார்கள். இப்படியான ஒரு துர்ப்பாக்கியமான நிலையில் முஸ்லிம்களில் எவரையும் தான் மறுமையில் ஒருபோதும் காணக் கூடாது என ஸஹாபாக்களைப் பார்த்து நபியவர்கள் கூறி, இவ்வாறான மோசடியின் பாரதூரத்தைப் பற்றி அதிக அளவு பேசினார்கள். (நீண்ட ஹதீஸின் கருத்து வடிவமே இங்கு தரப்படுகிறது. விரிவாகப் பார்க்க (ஸஹீஹ் புஹாரி, கிதாபுல் ஜிஹாத்)

பொதுச் சொத்துக்களை அல்லது பிறரது பொருட்களை எவ்வளவு அவதானத்துடனும் எச்சரிக்கையோடும் கையாள வேண்டும் என்பதனை உணர்த்த மேலுள்ள ஹதீஸ்கள் போதுமானவையாகும்.

எனவே, ஹராமாக அநியாயமாகத் தேட் பெற்ற பொருளை கழுத்தில் சுமந்து கொண்டு மறுமையில் வந்து பலரது முன்னிலையிலும் அவமானப்படும் துர்ப்பாக்கிய நிலைக்கு எவரும் ஆளாகிட நேரிடும் என்ற பயம் பொறுப்புக்களைச் சுமப்பவர்களுக்கு மிகவும் அவசியமாகும்.



அபகரிப்பின் வடிவங்கள்


யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் மட்டுமல்ல வக்ப் சொத்துக்கள், அநாதைகளது உடைமைகள், அரசசார்பற்ற நிறுவனங்களது சொத்துக்கள், அரச சொத்துக்கள், பைத்துல்மால் சொந்தமான பொருட்கள் என்பவற்றை கையாளும் போதும் இதே எச்சரிக்கை உணர்வு அவசியமாகும். பெரும்பாலானோர் இந்த விசயத்தில் மிகுந்த அசிரத்தையோடு நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் தமது பொருட்களைப் போல அவற்றை மதிப்பதில்லை. பாதுகாப்பதில்லை. மாறாக கிடைத்த சந்தர்ப்பங்களை 'நன்கு பயன்படுத்தி' அவற்றைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர். அலுவலகத் தொலைபேசி, காகிதங்கள், அரசாங்க வாகனம் மற்றும் உடமைகள் போன்றவற்றை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பாவிக்கின்றார்கள். இது பெரிய குற்றமாகும்.

ஒருவர் எந்தப் பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளாரோ அப்பதவியைகத் தனக்கான அல்லது தனது உறவினர்களுக்கான நலன்களை அடைந்து கொள்வதற்காக ஒருபோதும் பயன்படுத்தலாகாது. ஏனெனில் பிறரது சொத்தையோ தனது அதிகாரத்தையோ சட்ட ரீதியற்ற முறையில் முறைகேடாகப் பயன்படுத்துவது பெரும் துரோகமாகும்.



சம்பளத்துக்கு அப்பால்


அரசுகளும் கம்பெனிகளும் வேலையாட்களுக்குக் குறிப்பிட்ட அளவு சம்பளத்தை வழங்குகின்றன. ஆனால், அத்தொகையை விட அதிகமான அளவைப் பெற்றுக் கொள்ள ஒருவர் குறுக்குவழிகளை நாடினால் அது ஹராமான சம்பாத்தியமாகவே இஸ்லாத்தில் கணிக்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : ''நாம் நமது பொறுப்பொன்றுக்காக ஒருவரை அதிகாரியாக நியமித்து சம்பளமாக அவருக்கு ஒரு தொகையைக் கொடுக்கையில் அதற்கு மேலதிகமாக அவர் எடுத்தால் அது (குலூல்) அபகரிப்பாகும்''. (அபூதாவூது)

ஏனெனில், பலவீனர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் செலவிடப்பட வேண்டிய நிலையிலுள்ள அல்லது பொதுப்பணிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய பணத்தையே அவர் மோசடி செய்கின்றார் என்பதனால் தான் நபியவர்கள் இவ்வாறு கூறியிருக்கின்றார்கள்.

ஆனால், நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒரு களஞ்சியத்திலிருந்து, அல்லது நிதியிலிருந்து ஒருவர் மிகவுமே அற்பமான அளவைக் கூட திருடுவது, சட்டரீதியற்ற முறையில் அபகரிப்பதாகும் என்று நபி (ஸல்) வஅர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள் :

''உங்களில் ஒருவரை நாம் ஒரு பொறுப்புக்காக நியமித்து அவர் எம்மிடம் காட்டாமல் ஒரு தையல் ஊசியை அல்லது அதனை விட அற்பமான ஒரு பொருளi மறைத்தாலும் அது (குலூல்) மோசடியாகும். அதனை எடுத்துக் கொண்டு மறுமைநாளில் அவர் வருவார்.. .. உங்களில் ஒருவரை ஒரு பொறுப்புக்காக நாம் நியமித்தால் (அவர் சேகரித்த பொருள்) குறைந்த அளவாயினும் அதிக அளவாயினும் (அவை அனைத்தையும், அவர் எம்மிடம்) எடுத்து வரட்டும். அவருக்கு அப்பொருளிலிருந்து எந்த அளவு (நியாயமாக, சம்பளமாகவோ அல்லது சட்டபூர்வமாகவோ) வழங்கப்படுகிறதோ அந்த அளவை அவர் எடுத்துக் கொள்ளட்டும். அவர் எடுக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டவற்றை அவர் விட்டு விடட்டும்''. (ஆதாரம் : முஸ்லிம், கிதாபுல் இமாரா – 1833)

எனவே. சட்ட ரீதியற்ற முறையிலும் குறுக்கு வழிகளிலும் ஒருவர் மேலதிகமாக அனுபவிக்க முயல்வது குற்றமாகும்.



அன்பளிப்பும் லஞ்சமும்


அதுமட்டுமின்றி அபூஸயீத் (ரழி) அவர்களது கருத்துப்படி அதிகாரிகள் குடிமக்களிடம் இருந்து பெறும் அன்பளிப்புக்கள் (புகைவள) கூட (குலூல்) மோசடியாகவே அமையும்.

நபி (ஸல்) அவர்க்ள இப்னு லுத்பியா என்பவரை ஸகாத் சேகரிக்க அனுப்பினார்கள். தான் சேகரித்த பொருட்களில் ஒருபகுதியைச் சுட்டிக்காட்டிய லுத்பியா அவர்கள் அவை ஸகாத் பணம் என்றும் வேறு ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி அவை தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்தவை என்றும் கூறிய போது நபியவர்கள் 'இவர் தனது தாயின், தகப்பனின் வீட்டில் இருந்திருந்தால் இந்த அன்பளிப்புக்கள் கிடைத்திருக்குமா? என்று வினவி விட்டு ''எவன் கைவசம் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவர் (லுத்பியா) இந்தப் பொருட்களில் எதனையும் எடுக்கலாகாது. அப்படி எடுத்தால் (மறுமையில்) அதனைத் தனது கழுத்தில் சுமந்து கொண்ட தான் அவர் வருவார்..'' என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தனது இரண்டு கைகளையும் கமுக்கட்டு தெரியுமளவுக்கு உயர்த்தி, அல்லாஹ்வே நான் எத்தி வைத்து விட்டேனா?'' என்று கேட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சத்தை அல்லது அன்பளிப்புக்களைப் பெறுகின்ற பொழுது மறுபுறத்தில் சமூகக் கடமைகளில் அவர்கள் கோட்டை விடுவதற்கு ஈடாகவே அவற்றைப் பெறுவார்கள். பக்கசார்பான தீர்ப்புகளை வழங்குவதற்கோ வரியிலிருந்து லஞ்சம் வழங்குவோரை விலக்கிக் கொள்வதற்கோ, விஷேச சலுகைகளை அவர்களுக்கு வழங்குவதற்கோ அதிகாரிகள் லஞ்சத்தை அல்லது அன்பளிப்பைப் பெறுவது முழு சமுதாயத்திற்கும் எதிராக அவர்கள் இழைக்கும் துரோகமாகும். அப்படியான நடைமுறைகள் இருக்கும் சமுதாயம் குட்டிச்சுவராகி சின்னாபின்னப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும் அந்த சமூகம் பயந்தாங்கொள்ளியாகி எதிரிகளது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி விடும். இது இறைவன் விதித்த நியதியாகும்.

எனவே, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எந்த சமுதாயத்தில் (குலூல்) மோசடி பரவலாக இடம் பெறுகின்றதோ அவர்களுக்கு மத்தியில் அச்ச உணர்வு தோற்றுவிக்கப்படும்''. (முஅத்தா மாலிக் - கிதாபுல் ஜிஹாத்-26)

இந்த குலூல் எனப்படும் மோசடியில் ஈடுபடும் ஒருவர் அந்த சந்தர்ப்பத்தில் ஈமானுடன் இருக்க மாட்டார் என்பதை பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் பிரஸ்தாபித்தார்கள் : ''உங்களில் ஒருவர் மோசடி செய்கையில் அவர் முஃமினாக இருக்க மாட்டார். உங்களை நான் அப்படியான நிலையை விட்டும் கடுமையாக எச்சரிக்கிறேன்''. (முஸ்லிம் - கிதாபுல் ஈமான் - 103)



முன்னோரின் பேணுதல்


எனவே, அற்பமான பொருளாயினும் தனி மனிதர்களுக்கோ அரசுக்கோ, நிறுவனங்களுக்கோ அவை சொந்தமாக இருந்தாலும் அவற்றை தப்பான, முறையற்ற வழிகளில் விழுங்குவது மிகப் பெரிய குற்றம என உணர்ந்த எமது முன்னோர் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டார்கள். தமக்குக் கிடைத்த அதிகாரங்களையும், பதவிகளையும் அமானிதமாகவும் அல்லாஹ்வுக்கு கணக்குக் காட்ட வேண்டி பொறுப்புக்களாகவுமே கணித்து கடமை உணர்ச்சியின் உச்சத்திலிருந்து செயல்பட்டிருக்கின்றார்கள்.

மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கையில் தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்து, தன்னிடம் இருந்த பைத்துல்மாலுக்குச் சொந்தமான ஓர் ஒட்டகத்தையும், அடிமை ஒருவரையும், கந்தலான, மயிர்கள் கொட்டிய ஒரு துணியையும் பைத்துல்மாலில் சேர்த்து விடும்படி பணித்தார்கள். அவர்களது மரணத்தின் பின் அவை மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒருவர் புதிய கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் வந்து விசயத்தைக் கூறிய பொழுது, உமர் (ரலி) அவர்கள் பூமியில் கண்ணீர் சிந்தும் வரை அழுதார்கள். ஆனால், அவற்றை பைத்துல்மாலில் சேர்க்கவே அவர்கள் விரும்பினார்கள். இதுபற்றி அறிந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவாகள் 'இவற்றை அபூபக்கரின் குடும்பத்தாரிடமிருந்து பறிக்கப் பார்க்கின்றீர்களா? அவர்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள்' என்று கூறிய பொழுது, உமர் (ரலி) அவர்கள், ''எனது ஆட்சியில் இது நடக்காது'' என்றார்கள்.

உமர் (ரலி) தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிடச் சற்றுப் பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புல் தரையில் அதனை மேய்த்திருக்கலாம் என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது. அரச செல்வாக்கினால் இப்படி நடந்திருக்கலாம் என்பது அவர்களது கணிப்பாக இருந்தது. எனவே, அதனை விற்று அதன் பெறுமதியை பைத்துல்மாலில் சேர்த்து விடும்படி அவர்கள் தனது மகனைப் பணித்தார்கள்.

ஒரு தடவை அலி (ரலி) அவர்கள், போர்வையொன்றால் போர்த்திக் கொண்டிருந்த போதிலும் குளிரால் அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அன்தாரா (ரலி) அவர்கள் ''உமக்கும், குடும்பத்தாருக்கும் பைத்துல்மாலிலிருந்து ஒரு பங்கை அல்லாஹ் வைத்திருக்கின்றான். அப்படியிருக்க நீர் குளிரால் நடுங்குவதா?'' எனக் கேட்டார்கள். அப்போது அலி(ரலி) அவர்கள், ''அல்லாஹ் மீது சத்தியமாக நான் உங்களது இந்த (பைத்துல்மால்) பணத்திலிருந்த எந்த ஒரு பகுதியையும் எடுத்து அதனைக் குறைத்து விட மாட்டேன். இந்தப் போர்வையும் கூட எனது வீட்டிலிருந்த நான் பெற்றது தான்'' என்றார்கள். (அல் பிதாயா – பாகம் 7, பக் - 3)

எனவே, பொதுச் சொத்துக்கள் மற்றும் பிறரது உடமைகள் என்பவை மிகவுமே கவனமாகக் கையாளப்படல் வேண்டும். அப்படியில்லாத போது உலகிலும் மறுமையிலும் மிகப் பெரிய நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. உலகில் சம்பாதிக்கப்பட்ட பொருள் எவ்வழியில் தேடப்பட்டது என்ற முக்கியமான கேள்விக்கு மறுமையில் சரியான பதிலை அளிக்கும் வரை ஓர் அடியானின் கால்கள் இரண்டும் இருக்கும் இடத்தை விட்டும் நரக முடியாத நிலை உருவாகும்.(திர்மிதி)

தடுக்கப்பட்ட வழியில் பெற்ற உணவை உண்டு ஆடை உடுத்தி நிற்பவனது பிரார்த்தனை கூட அங்கீகரிக்கப்பட மாட்டாது. (முஸ்லிம்)

இக்கருத்துக்களை வேறு சில நபிமொழிகள் மூலமும் விளங்க முடிகிறது. அல்குர்ஆனிலும் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :

''உங்களுக்கு மத்தியில் உங்கள் சொத்து செல்வங்களை அநியாயமான முறையில் புசிக்காதீர்கள்'' (2:188) ''அதிகமான யூத அறிஞர்களும், கிறிஸ்தவ பாதிரிகளும் மக்களது சொத்துக்களை அநியாயமான முறையில் புசிக்கிறார்கள்''. (9:34)

''அநாதைகளின் சொத்துக்களை மிகவுமே சிறந்த வழிமுறையில் அன்றி நீங்கள் (கையாள வேண்டாம்) அணுக வேண்டாம்''. (6:152)

விசுவாசிகளே! நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துரோகம் செய்யாதீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அடைமானங்களுக்கும் (பதவிகள், பொருட்கள்) நீங்கள் மோசடி (துரோகம்) செய்யாதீர்கள். (8:28)

எனவே, அல்லாஹ்வின் சந்நிதியில் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்தோடு சிறிய, பெரிய அனைத்துப் பொறுப்புக்களையும் சொத்துக்களையும் கையாள்வது அவசியமாகும். குறிப்பாக, அடியார்களுக்கு வழங்க வேண்டிய பொருள்கள் உரிமைகள் விசயத்தில் இஸ்லாம் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதை மறக்காமல் செயல்படுவது அனைவரதும் தலையாய கடமையாகும்.



துணைநின்றவைகள் :

அஷ்ஷெய்க் அல் கஸ்ஸாலி குலுகுல் முஸ்லிம், அல் இத்திஹாதுல் இஸ்லாமி அல் ஆலமி, குவைத் பக், 78-80

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, பீ பிக்ஹி; அவ்வலியாத், மக்தபது வஹ்பா – கெய்ரோ, 1999- பக், 122-123

சஈத் ஹவ்வா, அல் இஸ்லாம், பாகம் 3, பக், 6-10 மக்தபது வஹ்பா – கெய்ரோ -1977

இமாம் இப்னு ஹஜருல் அஸ்கலானி, பத்ஹுல் பாரி, பாகம் 6, பக்.185-186

அபூத்தீப் சதிக்ஹஸன், அவ்னுல் பாரீ, பாகம் 3, பக்.593-595

ஷபீர் அஹமத் தேவ்பந்தி, பத்ஹுல் முல்ஹிம் அல் மக்தபதுர் ரஷீதிய்யா, பாகிஸ்தான், பாகம் 1, பக்.229

யூசுப் கான் திஹ்லவி,ஹயாதுஸ் ஸஹாபா, இதாரது இசாஅதித் தீனிய்யாத், பாகம் 2, பக்.229-230


நன்றி 
 இஸ்லாமியச் சிந்தனை 
அஷ் ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபழீல்
.