Saturday, August 18, 2012

ஹாலிவூட்டும் பென்டகனும் யுத்தங்களும்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

 
 யுத்தம் கொடூரமானது - வேதனையானது - இழப்புகளைத் தரக்கூடியது - அழிவுகளை உண்டுபண்ணக் கூடியது.ஆனால் ஹாலிவூடுக்கோ அது ஒரு தெய்வீகமான ஒரு விடயம்.1986 ஆம் ஆண்டு வெளியான PLATOON திரைப்படம் அமெரிக்காவின் வியட்நாமிய கொடூரத்தையும் தோல்வியையும் அப்பட்டமாக கூறியது.இந்த திரைப்படத்தின் இயக்குனர் Oliver Stone இன் கருத்துப்படி பென்டகன் என்பது ஒரு ஆலயம் அந்த ஆலயத்தின் தெய்வ அம்சம் பொருந்திய ஒரு விடயமே யுத்தம்.

   பென்டகன் ஹாலிவூட்டின் இந்த செல்லுலாய்டு கனவுகளுக்கு சக்தி மற்றும் அங்கீகாரம் அளித்து வருகின்றது.பென்டகனின் இந்த சக்தியைப் பெற்றுவரும் ஹாலிவூட் அமெரிக்காவை யாராலும் தோல்வியுறச் செய்ய முடியாத ஒரு ஹீரோ என்ற ஒரு கட்டுக்கதையை உருவாக்கிவருகிறது.ஹாலிவூட் திரைப்படங்களில் எல்லா யுத்தங்களிலும் வெற்றி பெரும் அமெரிக்கா ஏனோ தெரியவில்லை உண்மையான யுத்தங்களில் தோற்றுவருகிறது.ஈராக் மற்றும் ஆப்கான் போர்களில் எந்தவிதமான வெற்றியையும் பெறாத அமெரிக்க இராணுவத்தின் சர்வதேச பிம்பத்தை உச்ச அளவில் பாதுகாக்க அமெரிக்க ஊடகங்களுக்கு போட்டியாக ஹாலிவூட் திரைப்படத்துறையும் களத்தில் குதித்துள்ளது.

   2001 ஆம் ஆண்டு தாக்குதலின் பின் கொலைகார புஷ்ஷினால் துவங்கப்பட்ட "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு" ஹொலிவூட்டின் உதவியை நாடியது உலகறிந்த உண்மை.அதன் பின் ஹாலிவூட் தனது யுத்தப் படங்களில் யுத்தத்தை மிகவும் சமர்த்தியமாக சந்தைப்படுத்தியது.

   2007 ஆம் ஆண்டு வெளியான REDACTED திரைப்படம் அமெரிக்காவில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஏனெனில் இராக்கின் மக்மூதியாஹ் நகரில் வெறியாட்டம் ஆடிய அமெரிக்க இராணுவத்தினரின் வெறிச்செயலை அத்திரைப்படம் காட்டியது.4 பேரை அநியாயமாக படுகொலை செய்த அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் வெறும் 14 வயதுடைய அபீர் காசிம் ஹம்சா என்று அழைக்கப்பட்ட சிறுமியையும் பாலியல் வல்லுறவு செய்து கொன்றனர்.இந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமே REDACTED திரைப்படமாகும்.ஆனால் FOX NEWS சேனலோ அந்த திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு அமெரிக்கர்களை கேட்டுக்கொண்டது.

இந்த விடயம் தொடர்பாக அல் - ஜஸீரா தொலைகாட்சி சேவையில் ஒளிபரப்பான HOLLYWOOD AND THE WAR MACHINE என்ற நிகழ்ச்சி.

இந்த சிறு பதிவை எழுத தூண்டுகோலாய் இருந்த நிகழ்ச்சி.


இந்த விடயம் தொடர்பாக எழுதப்பட்ட பிரபல்யம் வாய்ந்த சில நூல்கள் 
Operation Hollywood

  •  As veteran Hollywood journalist David L Robb shows in this revealing insider's look into Hollywood's 'dirtiest little secret' - the final product that moviegoers see at the theatre is often not just what the director intends but also what the powers-that-be in the military want to project about America's armed forces.

Cinema Wars

  • Offers a thought-provoking depiction of Hollywood film as a contested terrain between conservative and liberal forces
  • Films and documentaries discussed include: Black Hawk Down, The Dark Knight, Star Wars, Syriana, WALL-E, Fahrenheit 9/11 and other Michael Moore documentaries, amongst others
  • Explores how some films in this era supported the Bush-Cheney regime, while others criticized the administration, openly or otherwise
  • Investigates Hollywood’s treatment of a range of hot topics, from terrorism and environmental crisis to the Iraq war and the culture wars of the 2000s
  • Shows how Hollywood film in the 2000s brought to life a vibrant array of social protest and helped create cultural conditions to elect Barack Obama

Hollywood Goes to War

  • Hollywood Goes to War reveals the powerful role played by President Franklin D. Roosevelt's Office of War Information—staffed by some of America's most famous intellectuals including Elmer Davis, Robert Sherwood, and Archibald MacLeish—in shaping the films that were released during the war years. Ironically, it was the film industry's own self-censorship system, the Hays Office and the Production Code Administration, that paved the way for government censors to cut and shape movies to portray an idealized image of a harmonious American society united in the fight against a common enemy.

     

மேலதிக ஒரு தகவல்.

 

ஜெர்மனியின் நாசிகளால் எடுக்கப்பட்ட பரப்புரை திரைப்படம்.(Propaganda Movie)

 
உறுதியின் வெற்றி (Triumph Of Will )

உறுதியின் வெற்றி என்று தமிழில் அழைக்கப்படக்கூடிய றைய்யம் ஒஃவ் த வில் (ஆங்கிலம்: Triumph of the Will; யேர்மன்:Triumph des Willens) நாசி  கட்சியை பற்றிய ஒரு பரப்புரை விபரண திரைப்படமாகும். இத்திரைப்படம் Leni Riefenstahl எனபவரால் 1934 ஆண்டு நடைபெற்ற நாசி  கட்சியின் Nuremberg பேரவையையின் நிகழ்வுகளை பதிவுசெய்கின்றது. இத்திரைப்படம் திரைப்பட நுட்ப வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கணிக்கப்படுவதோடு, உலக வரலாற்றில் ஒரு முக்கிய ஆவணமாகவும் திகழ்கின்றது. நாசி யேர்மனியின் ஏகபோக சர்வதிகார அரசை போற்றி எடுக்கப்பட்ட ஒரு பரப்புரை திரைப்படம் என்றபடியால், இத்திரைப்படம் சர்ச்சைக்குரியது.

சகோதர சகோதரிகளுக்கு ஈத் முபாரக்.
 
 






Saturday, August 11, 2012

பாசிச சிந்தனையின் உருவாக்கம்

இத்தாலி பாசிச கட்சியின் கொடி
பாசிசம் ஐரோப்பாவில் வேர்விட்டு வளர்ந்த ஒரு கருத்தியல் அல்லது சித்தாந்தம் ஆகும்.19 ஆம் நூற்றாண்டில் சில ஐரோப்பிய சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்தம் 20 ஆம் நூற்றாண்டில் இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் புழக்கத்துக்கு வந்தது.எனவே இந்த பாசிச சித்தனை பற்றி நாம் அறிவதற்கு ஐரோப்பாவின் வரலாற்றை அறிவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஐரோப்பிய வரலாற்றை பல கட்டங்களாக பிரிக்கலாம்.அதில் மிகவும் பொருத்தமான கட்டங்கள் பின்வருகின்றன.அவை
  1. கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலப்பகுதி.
  2. ஐரோப்பிய கலாச்சாரத்தில் கிறிஸ்தவம் தாக்கம் செலுத்த துவங்கிய காலப்பகுதி.
  3. சடவாத சிந்தனையின் தாக்கம் ஆரம்பித்த காலப்பகுதி.
 மேலுள்ள காலப்பகுதிகளில் பாசிசத்தின் தாக்கம் அதிகளவில் உணரப்பட்ட அல்லது ஆதிக்கம் செலுத்திய காலங்கள் முதலாவதும் மூன்றாவதுமாகும்.
பாசிசம் என்பது 19 ஆம் நூற்றாண்டில் சிந்தனாரீதியாக நிறுவப்பட்டு 20 நூற்றாண்டில் அதன் செயற்பாட்டை துவக்கினாலும் பாசிசத்தின் வேர்கள் ஐரோப்பாவில் ஏற்கனவே பரவிவிட்டதேன்பது குறிப்பிடத்தக்கது.



பண்டைய ஐரோப்பாவின் பாசிச கொள்கை.

கிறிஸ்தவத்துக்கு முன்னைய பண்டைய ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்த சமயக்கொள்கை பல கடவுட் கொள்கையாகும்.பண்டைய ஐரோப்பியர்கள் அவர்களின் அன்றாட ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் ஒவ்வொரு தெய்வங்களையும் தேவதைகளையும் நியமித்திருந்தார்கள்.அதுபோல் அவர்கள் யுத்தத்துக்கு பொறுப்பாகவும் ஒரு கடவுளை நியமித்திருந்தார்கள்.இந்த போர் கடவுள்களை சந்தோஷப்படுத்தவும் மரியாதையை செய்யவும் அவர்கள் வன்முறையை ஒரு புனிதமாக கருதினார்கள்.தனது நாட்டுக்காக இரத்தம் சிந்துவதும் கொலை செய்வதும் அவர்களின் புனிதமான கடமையாக கருதி வந்தார்கள்.

மாமன்னர் நிரோ 
இந்த வன்முறை மற்றும் மூர்க்கத்தனம் என்பவற்றை தடுக்க எந்தவிதமான நெறிமுறையும் அப்போது இருக்கவில்லை.அன்றைய பண்டைய ஐரோப்பாவின் நாகரீகத்தின் அச்சாணி என்று போற்றப்பட்ட ரோம் சாம்ராஜ்ஜியத்தில் கூட மனிதனை மனிதன் கொல்வதையும் மனிதனை மிருகம் நார் நாரை கிழிப்பதையும் மேடை போட்டு ரசித்த ஒரு சூழலே காணப்பட்டது.மாமன்னர் நீரோ ரோமின் ஆட்சியை கைப்பற்ற நடந்த கிளர்ச்சியில் இவனால் பல பேர் கொல்லப்பட்டனர் அப்படி கொல்லப்பட்ட நபர்களில் இவனின் தாய் மனைவி சகோதரன் என குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர்.இவனுக்கு கிறிஸ்துவர்கள் என்றால் அப்படியொரு கோபம்.பாரிய அரங்குகளில் கிறிஸ்தவர்களையும் காட்டு மிருகங்களையும் ஒன்றாக நிறுத்தி கட்டு மிருகங்கள் அவர்களை நார் நாராக கிழிப்பதை மிக சந்தோஷமாக பார்ப்பான்.கிருஸ்தவ அபொஸ்தலர்கலான  SAINT PAUL  மற்றும் APOSTLES PETER ஆகியோர்களை இவனே கொன்றான் என்றும் கூறப்படுகிறது.இந்த மாமன்னரே ரோம் நகரம் தீயால் எரிந்துகொண்டிருக்கும் போது யாழ் வாசித்தவன்.சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய இவனே அந்த நெருப்பை  மூட்டி அதற்கான பழியை கிறிஸ்தவர்களின் மீது  போட்டான் எனவும் கூறப்படுகிறது.
    



வன்முறைக் கலாச்சாரத்துக்கு தங்களை அர்பணித்துக் கொண்ட ரோமர்கள் ஒரு புறம் இருக்க வடக்கில் Vandals - Goths - Visigoths போன்ற பழங்குடியினர் ரோமர்களையும் மிஞ்சியவர்கலாக இருந்தனர்.அவர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டு தங்களை அழித்துக் கொண்டிருந்தன.மேலும் ரோமையும் இவர்கள் கொள்ளையடித்தனர்.பேகன் உலகில் வன்முறை இடம்பெறும் இடங்களில் அவர்கள் கொடூரமாக நடந்து கொண்டனர்.அப்படி நடந்துகொள்ளவே அவர்களின் தலைமைகளும் அவர்களை ஊக்குவித்தனர்.அங்கு நெறிமுறைகள் நியாயங்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது.


பேகன் உலகின் ஒரு பாசிச அமைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமே கிரேக்கத்தின் "ஸ்பார்டா நகரம்".


Lycurgus - Founder Of City State Of Sparta


ஸ்பார்ட்டா - பாசிசவாதிகளுக்கு ஒரு முன்மாதிரி

கி.மு.8 ஆம் நூற்றாண்டில் Lycurgus என்பவரால் நிறுவப்பட்ட ஸ்பார்ட்டா வன்முறைக்கும் போருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இராணுவ மாநிலமாகும்.ஸ்பார்டன்ஸ் மிகவும் கட்டுப்பாடில்லாத ஒரு கல்விமுறையை நடைமுறைப்படுத்தி வந்தனர்.அவர்களின் முறைப்படி மாநிலமே எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியம் வாய்ந்தது.ஸ்பார்டாவில் வாழ தகுதியுடையவர்கள் யாரெனில் மாநிலத்துக்கு பயனுள்ளவர்களே ஆகும்.பயனற்றவர்கள் அங்கு வாழத்தகுதியுடையவர்களல்ல.வலிமையான ஆரோக்கியமான குழந்தைகள் மாநிலத்துக்கு அர்பனிக்கப்பட்டன.வலிமையற்ற ஆரோக்கியமற்ற குழந்தைகள் மலைகளிலும் காடுகளிலும் விடப்பட்டு ஓநாய்களுக்கு இரையாக்கப்பட்டன.(பின்னைய நாட்களில் நாசிகளாலும் இந்த முறை பின்பற்றப்பட்டது.).ஸ்பார்ட்டாவில் ஆண் குழந்தைகளை பெற்றோருக்கு 7 வயது வரை மட்டுமே வளர்க்க அனுமதியுண்டு.அதன் பின் 12 வயது வரை அவர்களை 15 குழுக்களாக பிரித்து அவர்களுக்குள் போட்டிகளை வைத்து தலைவர்களை தெரிவு செய்வார்கள்.குழந்தைகள் தமது நேரத்தை உடலை வலுப்படுத்துவதிலும் போருக்கு தயாராவதிலுமே தமது நேரத்தை கழிப்பர்.


குழந்தைப் பருவத்திலிருந்தே ஸ்பார்டன்களின் ஒரே நோக்கம் ஒரே வெறி யுத்தம் அல்லது ரத்தம்.
கல்வி அறிவு மீது அவர்களுக்கு அவ்வளவு அக்கறை இருக்கவில்லை.ஆனால் இசை மற்றும் இலக்கியத்துறைகளில் அவர்களுக்கு கொஞ்சம் அக்கறை இருந்தது.அதுவும் இசைப்பதற்கு அனுமதிக்கப்பட்டது யுத்தம் சம்பத்தப்பட்ட பாடல்களும் கவிதைகளுமேயாகும்.(மொசொலினி மற்றும் ஹிட்லர் போன்றோரின் ஆட்சிக் காலங்களில் நான்கு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் கல்விமுறையிலும் இப்படிப்பட்ட ஒரு முறை இருந்தது.).

ஸ்பார்டா பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பித்தவர் புகழ்பெற்ற கிரேக்க சிந்தனையாளரான ப்லேடோ ஆவார்.ப்லேடோ ஜனநாயக முறையில் ஆட்சி செய்யப்படும் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தாலும் ஸ்பார்டாவின் பாசிச கொள்கையில் ஈர்க்கப்பட்ட இவர் ஸ்பார்டாவை ஒரு மாதிரி மாநிலமாக சித்தரித்தார்.ப்லேடோவின் இந்த பாசிச போக்குகள் காரணமாக 20 நூற்றாண்டின் முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவரான Karl Popper என்பவர் தனது " The Open Society And Its Enemies " என்ற புத்தகத்தில் ப்லேடோவை திறந்த சமூகத்தின் எதிரி என்றும் அடக்குமுறையான ஆட்சிகளுக்கு உத்வேகம் அளித்தவர்களில் முதலாமவர் என்றும் கூறியுள்ளார்ஆரோக்கியமற்ற பலமற்ற குழந்தைகளை கொல்லும் ஸ்பார்டாவின் அந்த கொள்கையை ப்லேடோ நிதானமாக ஆதரித்தார்.மேலும் ப்லேடோ Eugenics முறையின் முதலாவது தத்துவார்த்த ஆதரவாலராவர்.தனது இந்த வாதத்துக்கு மேல் சொன்ன இருவிடயங்களை Popper ஆதரவாக முன்வைக்கிறார்.மனித இனப்பெருக்கம் வளர்ச்சி என்பன அரசால் கண்காணிக்கப்பட வேண்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனும் கொள்கையில் உறுதியாக இருந்தவர் இந்த ப்லேடோ.

Plato - The Enemy OF Open Society

முதன்மை வர்க்கம் தாங்களே ஒரு முதன்மை இனம் என்று உணர வேண்டும்.ப்லேடோவின் கருத்துப்படி கார்டியன்ஸ் வர்க்கம் அதாவது போர்வீரர்களின் இனம் தூய்மையாக இருக்கவேண்டும்.எப்படி தூய்மையாக இருக்க வேண்டும் பலமற்ற ஆரோக்கியமற்ற குழந்தைகளை கொல்வதன் மூலம் இது தான் ப்லேடோவின் கருத்து.அதாவது அவர் சிசுக்கொலையை ஆதரிக்கிறார் என்பது தெளிவான விடயம். ஸ்பார்ட்டாவின் இந்த முறைகளை ஆதரித்த் ப்லேடோ அங்கு நடைமுறையில் இருந்த சமூக நிர்வாக அடக்குமுறையையும் ஆதரித்தார்.பிளேட்டோவின் பார்வையில் ஸ்பார்டன்களின் அந்த அடக்குமுறை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்தார்.ஏனெனில் மக்களுக்கு அரசின் ஆணைகளைத் தவிர வேறு எந்த விடயத்தையும் பற்றி நினைக்க சந்தர்ப்பம் இருக்கக் கூடாது.

இப்படிப்பட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள் ஸ்பார்டன் மக்களால் பின்பற்றப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது.மேலும் இவை ப்லேட்டோவினால் பாசிசத்தின் அடிப்படை பண்புகளாக விவரிக்கப்பட்டது.




இன்ஷா அல்லாஹ் தொடரும்